Thursday, January 26, 2017

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் கிழக்கு மாகாணம் நீரில் முழ்கும் அபாயத்தில்!

கிழக்கு மாகாணத்தில் கடும் வரட்சியின் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக அடைமழை பெய்து வருகிறது.  
இதன்காரணமாக குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.  பொத்துவில் பிரதேசத்தில் 138 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அம்பாறை பிரதேசத்தில் 98 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் நிஹால் சிறிவர்த்தன தெரிவித்தார்.

இங்கினியாகல, சேனாநாயக்க சமுத்திரத்தில் குறிப்பிடத்தக்களவு நீர் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் கடும் வரட்சியின் பின்னர் கிண்ணியா கந்தளாய் புல்மோட்டை மூதூர் மற்றும்; தோப்பூர் பிரதேசங்களின் மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Disqus Comments