Friday, August 3, 2012

செருப்பில் புத்தரின் படம் கொதிப்பில் பௌத்தர்கள் ???


அமெரிக்கா - கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்துள்ள புதிய காலணிகளில் புத்தரின் படம் பொறிக்கப்பட்டுள்ளமை அனைத்து பெளத்தர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த காலணி தயாரிப்பிற்கு தற்போதைக்கு புத்த மதத்தை பின்பற்றும் திபெத் மற்றும் பூட்டான் நாட்டு மக்கள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஐகன் ஷூஸ் என்ற நிறுவனமே இவ்வாறு புத்தர் படத்தை வைத்து காலணி தயாரித்துள்ளது. 

இது குறித்து பூசுங் செரிங் என்ற திபெத்தியர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்துள்ளார். 

புத்த மத வழக்கப்படி புத்தாவின் உருவத்திற்கு மரியாதை அளிக்கப்படும். அப்படிப்பட்ட புத்தரின் உருவப்படத்தை காலணியில் வரைந்திருப்பது புத்த மதத்தை பின்பற்றுவர்களை அவமதிக்கும் செயலாகும். அதனால் உங்கள் புத்தரின் படம் உள்ள ஷூக்களை தயவு செய்து சந்தையில் இருந்து திரும்பப் பெறுங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

ஆனால் இது குறித்து அந்நிறுவனம் எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. முன்னதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான காளியின் பெயரை வைத்ததோடு அந்த போத்தலில் காளியின் படத்தையும் போட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.






Disqus Comments