Friday, December 21, 2012

மாணவர்களிடம் புதைந்துள்ள மாற்றுமதக் கலாச்சாரம்

மாணவா்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஆணிவேராய் அமைவது தான் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை. இன்றைய காலகட்டத்தில் எமது இஸ்லாமிய சமூகத்தவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு. பெண்கள் மத்தியில் இருக்கும் விருத்தி கூட ஆண் சமூகத்திடம் இல்லாமை மிகவும் வருத்தத்துக்குரியது. கல்வியில் கவனம் செலுத்துவது மட்டும் தான் குறைவு ஆனால் அதற்கு மாற்றமான விடயங்களில் தாளரமாகவும், ஏராளமாகவும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. அப்படிப்பட்ட விடயங்களில் ஒன்றுதான் இந்த விடயமும்.

தமது வாழ்க்கையில் முக்கியமான ஒரு பரீட்சையை எழுதி முடித்துவிட்டு, முடிவுகள் எப்படி அமையும் எனும் ஓர் நிலையில் அல்லாஹ்வை மறந்த, இஸ்லாம் வெறுக்கும் இப்படியான நிகழ்வுகள் உண்மையில் கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

உண்மையில் மாற்று மதத்தவரே தங்களது திருவிழாக்களின்போது இப்படியான செயல்களில் ஈடுபடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது தவறான விடயமல்ல.

 மாணவர்களின் இச் செயலால் வீதியில் சென்றுகொண்டிருந்த சிலரும் பாதிக்கப்படுகின்றனா். அத்துடன் பரீட்சை எழுதிவிட்டு வீடு சென்றுகொண்டிருந்த பெண் மாணவிகள் மீதும் குறித்த நீல நிற மையை வீசுகின்றனா்.
கடந்த காலங்களில் இப்படியான நிகழ்வுகள் பாடசாலை வளாகத்துக்குள் சில தடவைகள் நடைபெற்றதை நாம் அறிந்திருக்கிறோம். அது இன்று பிரதான வீதிவரை துரத்திச் சென்று மாணவர்களை தாக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

இந் நிலமைக்கு யார் காரணம்!

பெற்றோர்களும், ஆசிரியர்களும் இவ் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி எதிர்காலங்களில் இப்படியான விடயங்கள் நடைபெறாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இதன் மூலம் உயிர் ஆபத்து ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி- ஷாஜில் செய்திகள்.
Disqus Comments