Sunday, December 23, 2012

2013-புதிய கல்வியாண்டின் அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வெளியீடு!

2013ம் ஆண்டு புதிய கல்வியாண்டின் அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி,
 1): முதலாம் தவணை ஜனவரி 2ம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05ம் திகதி  வரையும், 
 2): இரண்டாம்  தவணை ஏப்ரல் 22ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 2ம் திகதி வரையும், 
 3): மூன்றாம் தவணை செப்டம்பர் 02ம் திகதி முதல் டிசம்பர் 02ம் திகதி வரை நடைபெறுமென கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைகளில், முதலாம் தவணை ஜனவரி 02ம் திகதி முதல் ஏப்ரல் 09ம் திகதி வரையும், 2ம் தவணை ஏப்ரல் 17ம் திகதி முதல் ஜூலை 5ம் திகதி வரையும், 3ம் தவணை ஆகஸ்ட் 12ம் திகதி முதல் டிசம்பர் 6 ம் திகதி வரையும் நடைபெறவுள்ளது என கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments