Wednesday, May 1, 2013

ஐஸ் கிறீம் வாங்கி தருவதாக கூறி 6 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

(TM) ஐஸ் கிறீம்' வாங்கி தருவதாக கூறி ஆறுவயது சிறுமியை அழைத்துச்சென்ற சிறுவர்கள் இருவர் அந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பண்டாரகமவில் இடம்பெற்றுள்ளது.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனக்கு நடந்தவற்றை குறித்த சிறுமி தனது தாய் மற்றும் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் செய்த முறைப்பாட்டையத்தே குறித்த சிறுவர்கள் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
Disqus Comments