Wednesday, May 1, 2013

இந்திய மக்கள் தொகை 121 கோடியாக உயர்வு

(HN)இந்திய மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்ற அவர் இதனை தெரிவித்துள்ளார்.2011ஆம் ஆண்டு மூன்றாம் மாத நிலவரத்தின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 932 ஆகும்.

அதிகரித்த மக்கள் தொகையில் 90 லட்சத்து 99 ஆயிரம் பெண்களும், 90 லட்சத்து 97 ஆயிரம் ஆண்களும் அடங்குவர். தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பானது, முன்னர் மேற்கொண்ட கணக்கெடுப்பை விட 17.7 சதவீத அதிகரிப்பாகும் என்று தெரியவந்துள்ளது.பீகார் மாநிலத்தில் மாத்திரம் 25.4 சதவீதம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 83 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர்.

பெருநகரம் மற்றும் நகர்புறங்களில் 37 கோடியே 71 லட்சத்து 76 ஆயிரத்து 932 பேர் வசிக்கின்றனர். நகர்புற மக்கள் தொகையில் 97.5 சதவீதம் டில்லியிலும், 62.2 சதவீதம் பேர் கோவாவிலும், 52.1 சதவீதம் பேர் மிசோரத்திலும், 48.4 சதவீதம் பேர் தமிழ் நாட்டிலும், 45.2 சதவீதம் பேர் மகாராஷ்டிராவிலும் வசிக்கின்றனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments