தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் 60
அலகு வரையிலான மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத அதேவேளை 180
அலகு வரையிலான மின் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பு, கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின பிரதான கூட்டம் பொரளை
கெம்பல் பார்க் மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில்
நடைபெற்றது.
‘நாட்டை கட்டியெழுப்பும் மே தின அலை’ என்ற தொனிப் பொருளில் இன்று நடைபெற்ற இன்றைய கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார்.
60 அலகு வரை மின்சாரத்தை பயன்படுத்துவோரின் கட்டணத்தில் மாற்றம்
ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் 180 அலகு வரை பயன்படுத்துவோருக்கு நிவாரணம்
வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.ஐ. ம. சு.மு பிரதான கூட்டத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்டனர்.
