Wednesday, May 1, 2013

மாத்தறை நீதிமன்றம் சென்ற நாகப்பாம்பு!

(PT)மாத்தறையில் சுமார் ஆறு அடி நீளமான நாகபாம்பொன்று நீதிமன்றத்திற்குள் புகுந்தமையினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் மாத்தறை மாவட்ட நீதிமன்ற அறைக்குள் நேற்று நடந்தள்ளது.  இதனால் அங்கிருந்த பணியாளர்கள் பெரும் அச்சமடைந்தனர்.

பாம்பு புகுந்த சமயத்தில் மாவட்ட நீதிமன்ற அறைகளிலும் மற்றும் மேல் நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்திருந்தன.

இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் காவல் கடமையிலிருந்து பொலிஸாரும் அங்கிருந்த பிரதேசவாசிகளும் இணைந்து அந்த பாம்பை விரட்டிவிட்டனர்.
Disqus Comments