Sunday, January 13, 2013

அமெரிக்க பல்கலைக் கழக நீதிப்பீட நுழைவாயிலில் குா்ஆன் வசனம்.

உலக நீதித்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நீதி தொடர்பான வசனமாகக் கருதி புனித குர்ஆனின் வசனமொன்று அமெரிக்காவின் ஹர்வோர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டபீட நுழைவாயிலில் எழுதப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக http://www.emirates247.com என்ற இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

சூரதுன் நிஸாவின் 135 ஆவது வசனமே சட்டத்துறை தொடர்பில் சிறந்த வசனமாக குறித்த அமெரிக்க பல்கலைக்ழகத்தின் சட்ட  பிரதான நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. 
(விசுசாங் கொண்டோரே (நீங்கள் சாட்சி கூறினால் , அது) உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்தபோதிலும், நீதியை நிலைநிறுத்தி அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவா்களாக இருங்கள். அவா்கள் செல்வந்தா்களாக இருந்தாலும் சரி, அல்லது ஏழைகளாக இருந்தாலும் சரி, நீங்கள் நியாயம் வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீா்கள். நீங்கள் மாற்றிக் கூறினாலும், அல்லது புறக்கணித்தாலும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள்  செய்பவற்றை நன்கு அறிபவனாக இருக்கின்றான். 4-135)

குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சவூதி அரேபிய மாணவர் ஒருவர் அது தொடர்பிலான படங்களை டுவிட் செய்ததன் மூலம் அது தொடர்பான தகவல்கள் சவூதி பத்திரிக்கை ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகமானது அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
Disqus Comments