Friday, January 11, 2013

அல்லாஹ் மீது சத்தியமாக நான் அக்குழந்தையின் கழுத்தை நசிக்கவில்லை” – 30.01.2007ல் றிசானா எழுதிய வாக்குமூலம்




0.01.2007,

அல் தவாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி,

இலங்கையில் எனது முகவரி எம்எஸ்.நபீக், சாலி நகர் மூதூர்

எனது உண்யைமான வயது 19, நான் பிறந்த திகதி 02.02.1988 எனது வயதை எனது சப் ஏஜன்ட் அஜிர்தீன் என்பவர் 2.2.1982 எனக்குறிப்பிட்டு கடவச்சீட்டை வழங்கினார்.


நான் 01.04.2005ல் சஊதி அரேபியாவுக்கு வந்தேன். நான் சஊதி அரபியாவில் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன்.

இந்த வீட்டில் சமைத்தல், களுவுதல், 4 மாதக் குழந்தையை பார்த்தல் போன்ற ஆகியவற்றை செய்து கொண்டு இருந்தேன்.

குறித்த சம்பவ தினம் ஞாபகமில்லை. அது ஒரு ஞாயிற்றக்கிழமை பகள் 12.30 மணியிருக்கும் அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. அங்குள்ள 4மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன் வழமை போல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கின் மூலம் பால் வெளியேவர ஆரம்பித்தது.

அப்போது நான் குழந்தையின் தொண்டயை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன்.

குழந்தையின் தாய் எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு பிள்ளை பார்த்தார். அதன் பின்னர் அந்த எஜமானி எனக்கு செருப்பால் அத்துவிட்டு குழந்தையை எடுத்தக்கொண்டு போனார்.

அப்போது எஜமானி குழந்தையின் தாய் எனக்கு செருப்பால் மூக்கிலும் கன்னத்திலும் அடித்த அடியினால் எனக்கு இரத்தம் வந்து கொண்டிருந்தது.

பின்னர் என்னை பொலிசிக்கு கொண்டு போய் அங்கு ஒரு பட்டியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நசித்ததாக கூறுமாறு அடித்து வற்புறுத்தினார்கள். அவ்வாறு கூறும் வரை கரண்ட் பிடிக்கப்போவதாக கூறினார்கள்.

இந்த நிலையில்தான் அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பம் வைத்தேன். அப்போது எனக்கு பயங்கரமாக இருந்தது.

ஞாபக சக்தி அப்போது எனக்கிருக்கவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொள்ள நான் கழுத்தை நசிக்கவில்லை மேற்படி எனது வாக்கு மூலம் வாசித்து விளங்கிய பின்னர் உறுதியென உனர்ந்து கையொப்பமிடுகின்றேன். என அதில் றிசானா தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மேற்படி வாக்குமூலத்தின் பிரதி எனக்குறிப்பிடப்பட்டுள்ள படம் ஒன்று வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது
Disqus Comments