க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்; (நவோதயா பாடசாலை) 44 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதிகளை பெற்றுள்ளதாக வித்தியால அதிபர் தெரிவித்தார்.
இப்பாடசாலையில் இருந்து கலை மற்றும் வணிகப் பிரிவுகளில் பரிட்சைக்கு தோற்றிய 47 மாணவர்களுள் 44 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாக வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.ஸஹீர் தெரிவித்தார்.
வர்த்தகப் பிரிவில் ஐந்து மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் ஐந்து மாணவர்கள் 2ஏ, 1 பீ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
வணிகப்பிரிவில் எம்.ஆர்.எம்.ரயீஸ், ஆர்.எம்.ரிஷாப், ஏ.ஆர்.அஸ்கியா, எம்.எஸ்.சிஹாரா, ஏ.கே.எப்.நுஸ்கியா ஆகிய மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதோடு, எம்.எஸ்.எம்.சிபாக், எஸ்.எம்.அஷாம், ஏ.அறூஸ், எஸ்.எம்.ரபாத், மற்றும் எம்.எல்.அப்ரோஸ் பானு ஆகிய மாணவர்கள் 2ஏ, 1பி சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் ஏனைய மாணவர்கள் 2ஏ, 1சி, 1ஏ, 2பி, 3பீ என்ற அடிப்படையில் சித்தியடைந்துள்ளனர். இதேநேரம் கலைப்பிரிவில் ஜே.எம்.ரிலா 1ஏ, 2பி, என்.எப்.பர்லினா 1ஏ,2பி சித்திகளுடன் ஏனைய மாணவர்கள் 3 பி, 2 பி 1 சி என்ற அடிப்படையில் சித்தி பெற்றுள்ளனர்.
வணிகப்பிரிவில் மாவட்டத்தில் பத்தாவது இடம்பெற்ற மாணவனும் இப்பாடசாலையில் இடம்பெற்றுள்ளதாகவும் அதிபர் ஸஹீர் தெரிவித்தார்.
இவ்வாறு சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்ககளையும் தெரிவித்துள்ள பாடசாலை அதிபர் ஸஹீர், இவ்வாறான சிறந்த பெறுபேற்றினை மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன் பாடசாலை வளர்ச்சியில் முன்னின்று செயற்படும் பாடசாலை அபிவிருத்தி சங்கம், அபிவிருத்தி சபை, பழைய மாணவர் சங்கம் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோருக்கும் அதிபர் ஸஹீர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.