Friday, February 1, 2013

விருதோடையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இம்முறை நான்கு மாணவா்கள்

நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதர பெறுபேறுகளின் அடிப்படையில் விருதோடையிலிருந்து நான்கு மாணவா்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனா். விருதோடையின் வரலாற்றில் அதிக மாணவா்கள் தெரிவு செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இது விருதோடயின் வரலாற்றில் பொன்னால் பெறிக்கப்படவேண்டிய ஒரு முக்கிய நிகழ்வாகும்.

விஞ்ஞான பிரிவிலிருந்து ஒரு மாணவியும், முகாமைத்துவப் பிரிவிலிருந்து ஒரு மாணவியும், கலைத்துறையிலிருந்து இரு மாணவிகளும் இம்முறை தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

விஞ்ஞானப்பிவிலிருந்து  முகம்மது நாஸிர் தஸ்னீம் பானு என்ற மாணவியும், முகாமைத்துவப் பிரிவிலிருந்து சவாஹிர் பாதிமா ஸிஹாரா என்ற மாணவியும், கலைத்துறையிலிருந்து  முறையே முகம்மது நிஸார்  யாஸிரா இஸ்ஸத் என்ற மாணவியும் முஹம்மது ஸாஜஹான் முஹம்மது சப்னா என்ற மாணவியுமே மேற்படி எதிர்கால பட்டதாரிகளாவா்.

இந்த மாணவா்களில் முஹம்மது ஸாஜஹான் முஹம்மது சப்னா மாணவி மட்டுமே விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று பல்கலைக் கழகம் தெரிவு செய்யப்பட்டவராவார். ஏனைய மாணவா்கள் வேறு இடங்களில் கல்வி கற்று சித்தியடைந்தவா்களாவா். இவா் விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலேயே கல்வி கற்று பல்கலைக்கழகம் தோ்வு செய்யப்பட்டவா்களில் இவா் இரண்டாமவராவார். ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு பாதிமா ஜனூரியா என்ற தோ்வு செய்யபட்டு தற்போது தனது உயா் கல்வியை பல்கலைக் கழத்தில்  கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார் என்பறு குறிப்பிடத்தக்கது.

Disqus Comments