வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 23340 சிகரெட் தொகையுடன் இரு சந்தேகநபர்களை புத்தளம் வலய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
புத்தளம் நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் இருந்து நேற்று (01) மாலை குழி 200, கஞ்சா கலந்த போதை தூள் 46 பைக்கட் என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இவை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதை பொருட்கள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.