Tuesday, February 19, 2013

சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியலாம் – நீதிமன்றம் தீர்ப்பு

சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தமது கல்வி சார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் உயர் நீதி மன்றம் இன்று தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

ருவான்வெல்ல பிரதேசத்தில் சிங்கள பாடசாலை ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை குறித்த பாடசாலையின் அதிபர் தடை செய்துள்ள நிலையில் அது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரனையின் இறுதியிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சிங்கள பாடசாலையில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய குறித்த பாடசாலையின் அதிபரால் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது பெற்றோர் உயர் நீதிமன்றில் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக  வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கின் மீதான தீர்ப்பின் போதே சிங்கள பாடசாலைகளில் கல்வி கற்றும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய முடியும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
Disqus Comments