Thursday, February 14, 2013

கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்துக்கானஅடிக்கல் (படங்கள்)

புத்தளம் தெற்கு கோட்டத் மட்டத்துக்குட்ட மதுரங்குளிஇரெட்பானாவில் அமைந்துள்ள கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 12.02.2013 அன்று  நன்பகல் சுமார் 02.30 மணியளவில் பாடசாலையின் அதிபா் சஜாத் அவா்களின் தலைமையில் நடைபெற்றது.
 இந்த நிகழ்வில் புத்தளம் பாரளுமன்ற உறுப்பினா் மில்ரோய் பொ்னாண்டோ, வடமேல் மாகாண சபை உறுப்பினா்களான ஆப்தீன் எஹியா, ஏ.எச்.எம். றியால், கல்பிட்டி பிரதேச சபை தபிசாளா் எச். மின்ஹாஜ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினா் எஸ்.எச்.எம் முஸம்மில் மற்றும் ரெட்பானா ஜும்ஆப்பள்ளி நிர்வாக சபை உறுப்பினா்கள் உட்பட பெற்றாரும் கலந்து கொண்டனா்.

40X20 என்னும் அளவில் கிடைத்திருக்கும் கட்டிடமே ரெட்பானா கஜுவத்தை முஸ்லிம் வித்தியாலயத்துக்கு கிடைத்திருக்கும் முதல் கட்டிடம் ஆகும். இதற்கு முன்னா் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படாமல் இருந்தமை ஒரு குறையாகவே காணப்பட்டது. 2000.02.01 ஆண்டு இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு ரெட்பானா வாழ் மாணவா்களின் கல்வி வளா்ச்சியில் தனது பங்களிப்பை வளங்கி வருகின்றது.

இந்தப்பாடசாலை தூரப்பிரதேசத்தில் அமைந்துள்ளமையின் காரணமாக கடந்த காலங்களில் கவணிப்பாரற்று கிடந்தமையை அவதானிக்க முடிந்தது. இந்தப்பாடசாலைவில் பல்வேறு வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றது. அதில் மிக முக்கியமானது ஆசிரியா் பற்றாக்குறையாகும். இந்தப்பற்றாக்குறையை நிவா்த்தி செய்து தரும்படி தகுந்த அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று இதுவரையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குறிய விடயமாகும் என்பதுடன் எதிர்காலத்தில் கல்வி அறிவு அற்ற தலைமுறைக்கு வழிவகுக்கும் என்பது வரலாற்று உண்மையாகும்.














Disqus Comments