Thursday, March 21, 2013

இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை மேலதிக 12 வாக்குகளால்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.
 
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதேவேளை, இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் பங்குபற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. அத்துடன் அந்த வாக்களிப்பில் எட்டு நாடுகள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:- 

01.கொங்கோ
02.ஈக்குவாடோர்
03.இந்தோனேசியா
04.குவைத்
05.மாலைத்தீவு
06.மைவுரிடானியா
07.பிலிபைன்ஸ்
08.கட்டார்
09.சவுதி அரேபியா
10.தாய்லாந்து
11.உகாண்டா
12.பாகிஸ்தான்
13.வெனிசுவெலா
Disqus Comments