வெனிசுலா ஜனாதிபதியாக பதவி வகித்த ஹுகோ சாவேஸின் உயிர், கடந்த 5ம் திகதி இவ்வுலகை விட்டும் பிரிந்தது.
அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு தலை சாய்க்காமல் திகழ்ந்த அவருக்கு உலக நாடுகள் அஞ்சலி செலுத்தின.
இந்நிலையில் அவரது உடலை திட்டமிட்டபடி வெனிசுலா இராணுவ அகடாமி
மியூசியத்திற்கு தலைநகர் கரகாசின் தெருக்கள் வழியாக இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்ட இராணுவ வீரர்கள், பொலிவியா ஜனாதிபதி இவோ மொரலஸ், சாவேசின்
குடும்பத்தினர் கலந்து கொள்ள எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு அவரது உடல் மக்களின் பார்வைக்காக வைக்கப்படுமென
தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யாவில் மறைந்த அந்நாட்டு ஜனாதிபதி
லெனினின் உடல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.