புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் இன்று பதவியேற்றதுடன் மக்களுக்கு ஆசி உரை ஆற்றினார்.
உலகில்
உள்ள 120 கோடி கத்தோலிக்க கிறித்துவர்களின் தலைவரான போப் பதவிக்கு,
இம்மாதம் 13ம் திகதி, போப் பிரான்சிஸ் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில்
இன்று நடந்த பதவியேற்பு விழாவில் அவர், முறைப்படி பதவியேற்றார்.
வாடிகன் நகரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல், ஸ்பெயின் பிரதமர்
மரியானோ ரஜாய், பிரான்சு பிரதமர் ஜீன் மார்க் ஐரால்ட், அமெரிக்க துணை
ஜனாதிபதி ஜோ பிடன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் போப்
பிரான்சிஸின் தாய் நாடான அர்ஜென்டினாவின் ஜனாதிபதி, கிறிஸ்டினா கிர்ச்னரும்
இவ்விழாவில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பின்னர் திறந்த வாகனத்தில் உலா வந்தபடி மக்களுக்கு ஆசி வழங்கினார்.