Thursday, March 21, 2013

பாதியில் நின்ற ஒபமாவின் கார்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இரண்டாம் முறையாகப் பதவி ஏற்ற பின்னர் முதன் முறையாக அரசு முறைப் பயணமாக இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில்க்குச் சென்றுள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின்பொழுது நடந்த சம்பவம் குறித்து ஊடகம் ருசிகரத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் முதல் குடிமகனான ஒபாமா பாரம்பரியம் மிக்க லிமோசன் காரில் வந்து கொண்டிருந்தபொழுது அந்தக் கார் திடீரென பழுதடைந்து நின்று விட்டதால் பதட்டம் அடைந்த அதிகாரிகள் என்னவென்று ஆராய்ந்தபொழுது டீசலில் இயங்கக்கூடிய அந்தக் காரில் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் காரிலிருந்து இறங்கிய ஒபாமா மாற்றுக் காரில் ஏறி பயணத்தைத் தொடர்ந்துள்ளார். அவர் பயணம் செய்த கார் பழுதுபார்ப்பதற்காக இழுத்துச் செல்லப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்புப் பணியில் இருந்த எட்வின் டோனோவன் கூறுகையில், ஜனாதிபதி பாதுகாப்பிற்காக வந்த காரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனால்தான் எப்போதும் மாற்று கார்களையும், மெக்கானிக்குகளையும் உடன் அழைத்து வருவதாகவும் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

நன்றி : லங்கா கேசரி
 
Disqus Comments