இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான 'மத்தல ராஜபக்ஷ விமான நிலையம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது. புதிதாக
நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் இன்று உத்தியோகபூர்வமாக
தரையிறக்கப்பட்ட முதல் விமானத்தில் ஜனாதிபதி வந்திறங்கியதுடன் விமான
நிலையத்தினையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.