Monday, March 11, 2013

ஹலால் சான்றிதழ் இடைநிறுத்தம்?

ஹலால் சான்றிதழ் வழங்குவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

சகல தரப்பினரின் இனக்கப்பாட்டுடனேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இது சம்பந்தமான தரப்பினருடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ  பேச்சுவார்த்தைகள் நடத்தியதன் பின்னரே இவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதத்தலைவர்கள், இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகள், முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் ஜம்இயத்துலமா முக்கியஸ்தர்கள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹலால் சான்றிதழ் விநியோகிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் சந்தைக்கு விற்பனை செய்வதற்காக ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் நிறைவடையும் வரையிலும் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இதற்கு பின்னர் ஹலால் சான்றிதழ் விநியோகிக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டால் எவ்விதமான கட்டணங்களும் அறவிடாமல் விநியோகிப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹலால் சான்றிதழுடன் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் தொடர்பில் பொதுபலசேன அமைப்பினர் கடந்த காலங்களில் எதிர்ப்புக்களை தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
TM
Disqus Comments