Sunday, March 17, 2013

தொழிலை கொடுத்து பௌத்த இளைஞர் யுவதிகளை மதமாற்றம் செய்கின்றனர்: விமலஜோதி தேரர்

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த இளைஞர் யுவதிகளை பல வழிகளில் மத மாற்றம் செய்து வருகின்றனர். அதாவது முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களில் பௌத்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுத்து அவர்களை பல வழிகளில் மத மாற்றம் செய்கின்றனர். இது தொடர்பாக எமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளது. இன்னும் 50 வருடங்களில் இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற மேற்கொள்ளப்படும் விசேட திட்டங்களே இவை. இவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.

இன்று மாலை கண்டி நகரில் மத்திய சந்தை முன் இடம்பெற்ற பொதுபல சேனாவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய கிரம விமலஜோதி தேரர்,
முப்பது வருட கால யுத்ததம் ஒன்றை அனுபவித்த நாங்கள் மற்றுமொரு இனவாத அல்லது மத வாத யுத்தம் எற்பட இடமளிக்க மாற்றோம். நாங்கள் 400 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தோம். அக் காலத்தில் நாங்கள் எதிர்நோக்கிய சவால்கள் எண்ணிலடங்காதவை. சிங்கள பௌத்த மக்கள் அன்று முதல் உயிர் தியாகம் செய்தே இன்நாட்டை பாதுகாத்தனர்.
  
தற்போது மீண்டும் எம் நாட்டுக்கு பல்வேறு வடிவில் சவால்களும் ஆக்கிரமிப்புக்களும் வந்த வண்ணம் உள்ளன. இலங்கையில் 400 க்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த இளைஞர் யுவதிகளையும் மதமாற்றம் செய்யும் நடடிவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டை இஸ்லாமிய நாடாக்கும் விஷேட திட்டத்தில் இதுவும் ஒன்று.

 அந்நதவகையில் நாங்கள் இந்த அபாயகரமான நிலையை உணர்ந்து கடந்த மே மாதம் முதல் நடாத்திய போராட்டதின் பாரிய வெற்றிதான் ஹலால் வெற்றியாகும். எங்களில் சிலர் எமக்கு குற்றம் கூறுகின்றனர். நாங்கள் இன யுத்தம் ஒன்றையும் மத யுத்தம் ஒன்றையும் திணிக்க முற்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இருந்த போதும் நாங்கள் 30 வருடங்களாக நாங்கள் அனுபவித்த யுத்தம் காரணமாக நாட்டின் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டனர். எனவே இன்னுமொரு இன மத மோதலை ஏற்படுத்த நாங்கள் இடமளிக்க மாட்டோம் என கூற விரும்புகின்றோம் என்றார்.

Disqus Comments