Tuesday, March 12, 2013

ரூ.30 லட்சம் பிணைத் தொகையில் கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற யானை!

இந்தியாவின் உயரமான யானை என்ற பெருமைபெற்ற ராமச்சந்திரன் என்கிற வளர்ப்பு யானை, கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் விடுதலையாகி மேலும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.
கேரள மாநிலம், தெச்சுக்கோட்டுக்காவு பெரமங்களத்து தேவஸ்தானத்திற்கு சொந்தமான இந்த யானைக்கு தற்போது 45 வயதாகிறது.
3.5 மீட்டர் உயரமுள்ள ராமன் 3 பெண்களை மிதித்துக் கொன்றதாக பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ராமச்சந்திரனை கைது செய்த வனத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
தெச்சிக்கோட்டுக்காவு கோயிலில் நடைபெறும் திருவிழாவில் அணிவகுக்க ஏற்றவகையில் ராமனை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மதம் பிடித்த நிலையில் உள்ள ராமச்சந்திரனை இன்னும் 3 மாதங்களுக்கு வெளியே விடக்கூடாது என வனத்துறை மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இரு தனிநபர் ஜாமீன் மற்றும் ரூ.30 லட்சம் பிணைத் தொகை உத்தரவாதம் அளித்து ராமச்சந்திரனை ஜாமீனில் அழைத்துச் செல்ல கோர்ட் உத்தரவிட்டுள்ளது

Disqus Comments