கிறித்தவ
மதத்தின் மிகப்பெரிய பிரிவாக உள்ள கத்தோலிக்கப் பிரிவின் மதத்
தலைமைப்பீடம் இத்தாலியில் உள்ள வாடிகனில் உள்ளது. இங்கு இருந்துதான்
கத்தோலிக்க கிறித்தவர்களுக்கும், கிறித்தவ தேவாலயங்களுக்கும் உண்டான
அனைத்து வழிகாட்டுதல்களும் உலகம் முழுவதும் சென்றடையும். அவர்களது மதத்
தலைவரான போப் ஆண்டவர்தான் ஆன்மீக அந்தஸ்த்தில் முதலிடம் பெற்றவர் என்று
கத்தோலிக்க கிறித்தவர்கள் நம்புகின்றனர்.
போப்
ஆண்டவராக கடந்த 2005ஆம் ஆண்டு பதவியேற்ற 16ஆம் போப் பெண்டிக்ட், தான் போப்
ஆண்டவர் பதவியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி
அறிவித்தார். பிப்ரவரி 28ஆம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றார்.
முதுமை
மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து 28ஆம் தேதி போப் 16ஆம்
பெண்டிக்ட், பதவி விலகியதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிக்கோ
லொம்பார்டி அறிவித்துள்ளார். 600 ஆண்டுகால வரலாற்றில் போப் ஆண்டவர் பதவியை
இதுவரை யாரும் ராஜினாமா செய்ததில்லை. இவர்தான் முதன் முறையாக அப்பதவியை
ராஜினாமா செய்துள்ளார் என்பதால் இது கத்தோலிக்க கிறித்தவர்களுக்கு
மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போப்
ஆண்டவர் பதவி என்பது சாதாரணமான பதவி அல்ல; பல கோடி கத்தோலிக்க
கிறித்தவர்களுடைய ஆன்மீகத்தலைவர் பொறுப்பு என்பது மிக உயர்ந்த
பொறுப்பாகும். அதிலிருந்து ஒருவர் தானாக ராஜினாமா செய்வது என்பது குதிரைக்
கொம்புதான்.
இதற்கு
முன்னால் உள்ள போப்கள் எல்லாம் கோமா நிலையில் பல நாட்கள் படுத்த
படுக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே போப் ஆண்டவர்
பதவியில் நீடித்து அதே நிலையிலேயே மரணித்துள்ள நிலையில், அதிரடி முடிவுகளை
அவ்வப்போது அறிவித்து வந்தவரும், துணிச்சலான முடிவுகளை யாருக்கும்
பயப்படாமல் எடுத்து, வலிமையானவராக தற்போதும் திகழ்ந்து கொண்டுள்ள 16ஆம்
பெண்டிக்ட் அவர்கள் ஏன் திடீரென ராஜினாமா செய்ய வேண்டும் என்பதன் பின்னணியை
நாம் ஆய்வு செய்வோமேயானால், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன.
கிறித்தவ மக்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப் :
இந்த
போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதாவது
கிறித்தவ மக்களாலேயே எதிர்க்கப்பட்ட ஒரே போப் இவர்தான். ஓரினச்சேர்க்கை
புரிவது, அவ்வாறு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு
சட்டப்பூர்வமாக சாஸ்திர சம்பிராதயங்களுடன் தேவாலயங்களில் கிறித்தவ
முறைப்படி திருமணம் முடித்து வைக்கும் கேவலங்களும் ஆன்மீகத்தின் பெயரால்
அரங்கேறி வருகின்றன.
இந்தக்
கேவலத்தை எதிர்த்த ஒரே போப் இவர் மட்டும்தான். ஓரினச்சேர்க்கைக்கு
எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், இந்தச் செயலானது சமூகத்தின்
ஒழுங்கு நிலையை பாதிக்கும் எனவும், திருமணத்தின் சட்டரீதியான வரையறையை
இத்தகைய அரசியல் மற்றும் கலாச்சார அமைப்புகள் மாற்றி அமைக்கின்றன என்றும்
அதிரடியாக அறிவிப்புச் செய்தார்.
ஓரினச்
சேர்க்கையாளர் திருமணம், திருமணத்துக்கு முன்னரே ஆணும் பெண்ணும் இணைந்து
வாழ்வது ஆகியவை கடுமையான பாவம் என்று தங்களுக்கு கீழ் வரும் ஆலயங்களில்
வலியுறுத்துமாறு எல்லா ஆயர்களுக்கும் அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தினார்.
இது
கிறித்தவ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேவாலயங்கள்
அதிகாரப்பூர்வமாக ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை நடத்தி ஒழுக்கத்தை
நிலைநாட்டி(?) வரும்போது, இவர் அதைத் தடுப்பது சரியில்லை என்றும், இவருக்கு
எதிராக ஸ்பெயினில் போராட்டம் நடைபெற்றது;
ஓரினச்சேர்க்கையாளர்களாக
உள்ள கிறித்தவர்கள் போப் வரவிருந்த சாலையில் ஒன்று திரண்டு
ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து
ஒழுக்கத்தை நிலைநாட்டிய(?) செய்திகள் அனைவரும் அறிந்ததே! அப்போதே அவரை பதவி
விலகச் சொல்லி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அதுமட்டுமல்லாமல், கருத்தடை செய்வதற்கு எதிராகவும் தனது கண்டனத்தைத் துணிவோடு இவர் பதிவு செய்தார்.
பாதிரியார்கள்
செய்யும் பாலியல் அட்டகாசங்களை கண்டித்ததோடு மட்டுமல்லாமல்,
பாதிரியார்களால் சீரழிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்களிடம் பகிரங்க
மன்னிப்புக்கோரிய ஒரே போப்பும் இவர்தான்.
இப்படி
இவர் செய்த சாதனைகள் நிறைய உள்ளன. இவர் செய்த சாதனைகள் எல்லாம் கிறித்தவ
மக்களுக்கு சோதனையாகவும், வேதனையாகவும் அமைந்ததால் இவரை மிரட்டி,
வலுக்கட்டாயமாக ராஜினாமா வாங்கியுள்ளனர் என்று தற்போது செய்திகள்
வரத்தொடங்கியுள்ளன.
போப்
ஆண்டவரது ராஜினாமா இயற்கையானது அல்ல என்றும், அதற்கு பின்னணியில் பல
விஷயங்கள் உள்ளன என்றும், இத்தாலியில் உள்ள பத்திரிக்கைகள் உண்மையைப்
புட்டுப் புட்டு வைத்தன. எங்கே குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று அஞ்சிய
இத்தாலியிலுள்ள வாடிகன் நிர்வாகம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சொல்லி
கீழ்க்கண்ட அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது .
இதுகுறித்து, வாடிகன்அதிகாரி பெடரிக்கோலொபர்டியோ கூறியதாவது:
போப்
பதவி விலகுவது, 600 ஆண்டுகளாக நடக்காத ஒன்று. அவரது முடிவு குறித்து,
பத்திரிகைகள் அவதூறாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த வதந்திகள்,
திருச்சபைக்கு அதிக வருத்தத்தை அளித்துள்ளது. வாடிகனில், சில
பாதிரியார்களது நடவடிக்கைகளில் அதிருப்தி யடைந்ததால்தான், போப் பதவி விலக
தீர்மானித்ததாக, இத்தாலி நாட்டின், “லா ரிப்பப்ளிக்‘ பத்திரிகை செய்தி
வெளியிட்டுள்ளது. சபையில், ஊழல்கள் பெருகிவிட்டதாக, சில பத்திரிகைகள்
கூறியுள்ளன.
வாடிகனில்
உள்ள சில கார்டினல்கள் குறித்தும், தவறாக செய்திகள் எழுதப்பட்டு உள்ளன.
“புதிய போப்பை தேர்வு செய்வதற்கு கூட, சில கட்டுப்பாடுகள் கொண்டு
வரவேண்டும்‘ என்றும், பத்திரிகைகள் எழுதி வருகின்றன. இவ்வாறு, பெடரிக்கோ
லொபர்டியோ கூறியுள்ளார்.
மேற்கண்ட
அறிக்கையின் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று வாடிகன் நிர்வாகம்
நிரூபித்துள்ளது. எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால், அதை போப் தனது வாயால்
அறிவித்திருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் உலகளாவிய அளவில்
விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையிலும் அதை மறுப்பதும்கூட வாடிகன் நிர்வாகம்தான்
எனும்போது, இதுகுறித்த சந்தேகம் இன்னும் வலுக்கின்றது.
மேலும்,
போப் பதவி விலகிய கடைசி நாள் தனது ராஜினாமா குறித்து சொல்லப்படக்கூடிய
குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பளித்து உரை நிகழ்த்துவார் என்று அனைவரும்
எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகள் எதையும் அவர் தனது
இறுதி உரையில் மறுக்கவில்லை. மாறாக அதை வலுப்படுத்தக்கூடிய விதத்தில்தான்
வார்த்தைகளை கூறினார். அதாவது தன்னை ஓய்வு பெறச் சொல்லி கடவுள் தனக்கு
கட்டளையிட்டதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.
போப்பையே
மிரட்டக்கூடிய அளவிற்கு எனக்குமேல் உள்ள கடவுள் என்னிடம் ராஜினாமா செய்யச்
சொன்னதன் விளைவாக நான் ராஜினாமா செய்கின்றேன் என்பதுதான் இதன் பொருள்.
அந்த அளவிற்கு இவர் மிரட்டப்பட்டுள்ளார் என்பது இதன் மூலம்
தெரியவருகின்றது.
- · ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு
- · கருத்தடைக்கு எதிர்ப்பு
- · பாலியல் பாதிரியார்களுக்கு எதிர்ப்பு
- · பாதிரியார்களால் பாலியல் சேட்டைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு
என்று
துணிச்சலான முடிவுகளை அறிவித்து அதிரடியாக ஆக்ஸனில் இறங்கிய இவர்தான்
தற்போது பலவீனமாக உள்ளதாக கதை அளக்கின்றது வாடிகன் நிர்வாகம். இதுவரை வந்த
போப்களிலேயே 16ஆம் பெண்டிக்ட் அவர்களைப்போல துணிச்சல் மிக்க, பலமான போப்
யாரும் இருந்ததில்லை என்று அனைவரும் சொல்லும் வேளையில், இவர் ரொம்ப பலவீனம்
அடைந்துவிட்டதால் ராஜினாமா செய்கின்றார் என்று வாடிகன் நிர்வாகம் அனைவரது
காதிலும் பூச்சுற்றும் வேலையைப் பார்த்துள்ளது.
கிறித்தவ
ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் கிறித்தவ பாதிரியார்கள் ஆகியோருக்கு
எதிரான மேற்கண்ட அதிரடி அறிவிப்புகள் மட்டும் போப் எதிர்ப்பாளர்களுக்கு
கோபத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக இஸ்லாம் குறித்து போப் 16ஆம் பெண்டிக்ட்
கூறிய பல செய்திகள் கிறித்தவ மக்களை சிந்திக்க வைத்துள்ளது.
இஸ்லாம் குறித்து போப் கூறிய கருத்துக்கள்:
- · இஸ்லாம்தான் இந்த உலகில் அதிகமாக வளர்ந்துவரக்கூடிய மார்க்கமாக உள்ளது.
- · இஸ்லாமியர்கள்தான் பெரும்பான்மையானவர்களாக இந்த உலகில் தற்போது மாறியுள்ளார்கள்.
- · இஸ்லாம் அபரிதமான வளர்ச்சியை தற்போது அடைந்து வருகின்றது;
- · இந்த நூற்றாண்டின் இறுதியில் இதைவிட இன்னும் பலமடங்கு அது வளர்ச்சியடையும்.
என்று இஸ்லாம் குறித்து இவர் சொன்ன கருத்துக்கள் உண்மையிலேயே துணிச்சலான கருத்துக்கள்தான்.
அதோடுமட்டுமல்லாமல்,
இஸ்லாத்தின் வளர்ச்சியை சிலாகித்துச் சொன்ன போப் அவர்கள் கிறித்தவ மக்கள்
மத்தியில் நிலவக்கூடிய தவறான நம்பிக்கைகளையும் போட்டு உடைத்தார்.
போப்
16ஆம் பெண்டிக்ட் எழுதி வெளியிட்ட நூல், “jesus of nazareth the infancy
narratives” (ஜீஸஸ் ஆஃப் நாசரேத்) ஆகும். இந்த நூலில் இயேசு குறித்த பல
உண்மைகளை துணிச்சலோடு இந்த உலகிற்கு அறிவித்தார்.
அந்தப் புத்தகத்தில் அவர் அளித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் பின்வருமாறு:
- டிசம்பர் 25ஆம் தேதியை இயேசுவுடைய பிறந்தநாள் என்று கிறித்தவர்கள் கொண்டாடுகின்றார்கள். அது தவறு.
- · இயேசு டிசம்பர் 25ஆம் தேதிதான் பிறந்தார் என்பதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை.
- · இயேசு பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான் என்பது தவறு. அதற்கும் பைபிளில்ஆதாரம்இல்லை.
- · இயேசு பிறக்கும்போது தேவதைகள் வந்தார்கள் என்று சொல்லப்படுவதற்கும் ஆதாரம் இல்லை.
- · இயேசு பிறந்த வருடம் என்று சொல்லப்படக்கூடிய வருடத்தையும் தவறாகத்தான் சொல்லியுள்ளார்கள், அதுவும் தவறு.
என பல விஷயங்களை துணிச்சலோடு சொல்லக்கூடிய அளவிற்கு துணிவும், தைரியமும் கொண்ட ஒரே போப்பாக இவர் திகழ்ந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல்,
பர்னபாஸ் என்ற இயேசுவின் சீடர் எழுதிய செய்திகள் அடங்கிய ஒரு புராதன
பைபிள் ஒன்று சென்ற 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துருக்கியில்
கண்டெடுக்கப்பட்டது. அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த
முன்னறிவிப்புகள் உள்ளன என்றும், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்ற
செய்திகளும் உள்ளது என்றும் பல உண்மைகள் வெளிவந்தன. அப்போது அந்த பைபிளை,
தான் பார்க்க விரும்புவதாக வெளிப்படையாக அறிவித்தார் போப் 16ஆம்
பெண்டிக்ட்.
இப்படி
இஸ்லாத்திற்கு ஆதாரவாகவும், கிறித்தவத்திற்கு எதிராகவும் உண்மையைச்
சொன்னதும்கூட இவரை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டக்கூடிய அளவிற்கு கொண்டு
சென்றுள்ளது என்பதுதான் தற்போது நடுநிலையாளர்களின் ஒரே கவலை.
எது
எப்படியோ பாமர மக்களைக் காட்டிலும் படித்த பாதிரியார்களுக்குத்தான் எது
சத்தியம் என்பது தெளிவாக தெரிந்திருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் கிறித்தவர்களின் மத நம்பிக்கையில்
உள்ள குறைபாடுகளும், இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என்ற சத்தியமும் இந்த
போப் 16ஆம் பெண்டிக்ட் அவர்களது மனசாட்சிக்கு தெரிந்திருக்கும்.
அவர் கூடிய விரைவில் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிமாக மரணிக்க அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.
கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் :
கத்தோலிக்க
கிறித்தவர்கள் தங்களது ஆன்மீகத்தலைவராக போப் ஆண்டவரை நம்புகின்றனர். அவரது
பிரார்த்தனை இருக்குமேயானால், நமக்கு அவரது ஆசி மூலம் அனைத்தும்
கிடைத்துவிடும் என்றும் நம்புகின்றனர்.
மனிதனுக்கு
மிஞ்சிய மாபெரும் ஆற்றலும், கடவுள் தன்மையும் அவருக்கு உள்ளதாக
கிறித்தவர்கள் நம்புகின்றார்கள். பரிசுத்த ஆவி அவர் மீது மேலாடுவதாகவும்
நம்புகின்றனர். அதனால்தான் தங்களது நோய் தீருவதற்கும், தங்கள் வாழ்வில்
நல்லவைகள் நடப்பதற்கும் அவரிடத்தில் இவர்கள் கையேந்தும் நிலை உள்ளது.
இப்படி
இவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் நம்புவதற்கு ஏற்றாற்போல
ஆற்றல்களுடன் போப் ஆண்டவர் உள்ளாரா என்பதை அவர்கள் சிந்திக்க
மறந்துவிட்டனர்.
போப்
ராஜினாமா செய்வதற்கு வெளியே சொல்லாத பல காரணங்கள் இருந்தபோதும், வாடிகன்
நிர்வாகம் வெளிப்படையாக கூறியுள்ள காரணத்தை முதலில் எடுத்துக் கொள்வோம்.
முதுமை
மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகத்தான் அவர் பதவி விலகுகின்றார் என்பதே
அவர்கள் கூறிய காரணம். அப்படியானால் அனைத்து ஆற்றலும் பெற்ற ஓர்
ஆன்மீகத்தலைவர், பல அற்புதங்கள் செய்ய சக்தி பெற்றவராக அவர்களால்
கருதப்பட்ட போப் ஆண்டவர், தனது சிறப்பு(?) பிரார்த்தனையின் மூலம்
ஆயிரக்கணக்கானவர்களது நோயை நீக்கி வைத்ததாக அவர்கள் கருதக்கூடிய போப்
ஆண்டவர், தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள முதுமை மற்றும் உடல் நலக்குறைவு
காரணமாக போப் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார் என்றால், இவர்களது
இவ்வளவுகால நம்பிக்கை தரைமட்டமாக்கப்பட்டு தவிடுபொடியாக ஆக்கப்பட்டுள்ளதா,
இல்லையா?
தனக்குத்தானே
தனது முதுமையை போக்கிக் கொள்ள இயலாத, தனது உடல் நலக்குறைவை சரி செய்து
கொள்ள இயலாத போப்களா இத்தனை நாட்கள் அனைவரது நோயையும் தீர்த்து வைத்தார்கள்
என்று கிறித்தவ சகோதரர்கள் ஏன் சிந்திக்க மறுக்கின்றார்கள்?
இரண்டு
வருடங்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற இடத்தில் வழுக்கி விழுந்து போப்
ஆண்டவரது கை உடைந்ததே! அவர் தன்னுடைய உடைந்த கையை சரி செய்வதற்கு எந்த
ஜெபக்கூட்டத்திற்குமோ, எந்த அற்புத பெருவிழாவுக்கோ செல்லவில்லை. மாறாக
அங்கிருந்த மருத்துவமனைக்குச் சென்றுதான் கட்டுப்போட்டுவிட்டு வந்தார்.
அனைவருக்கும்
ஆசி வழங்கக்கூடிய தனது கை உடைந்தபோது, பிறருக்கு ஆசி வழங்கக்கூடிய அவரது
கையால் அவரது கைக்கே ஆசி வழங்க இயலவில்லை எனும்போது, இவரது கையை வைத்து
பிறருக்கு எப்படி இவர் ஆசி வழங்குவார் என்று கிறித்தவ சகோதரர்கள் நம்ப
மறுப்பது ஏன்?
போப்
அவர்கள் ஆண்டவர் என்று அழைக்கப்பட்டாலும் அவர் அனைத்து நிலைகளிலும்
மனிதனாகத்தான் இருந்துள்ளார். அவர் மனிதன் என்பதை நிரூபித்தும் வருகின்றார்
என்று தெள்ளத்தெளிவாக யாருக்குத் தெரிகின்றதோ இல்லையோ, போப் பதவியிலிருந்த
16ஆம் பெண்டிக்ட் அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தே இருக்கும். அதனால்தான்
அவர் பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார். போப்புக்கு தெரிந்த உண்மையை
கிறித்தவ சகோதரர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது ஆவல்.
குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் அடுத்த ஆதாரம்:
கடந்த
2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் போப் ஆண்டவரின் கடிதங்களை திருடி ஒரு
பத்திரிகையாளரிடம் கொடுத்த வாடிகன் சமையல்காரருக்கு 18 மாதங்கள் சிறைத்
தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கியான்லுகி
நுஸி என்ற பத்திரிகையாளர் அண்மையில் ரோமன் கத்தோலிக்க தேவாலய
தலைமையகத்தில் நிலவும் உட்பூசல் மற்றும் ஊழல் பற்றி புத்தகம்
எழுதியிருந்தார். இந்தப் புத்தகத்துக்காக போப் ஆண்டவரின் கடிதங்களை போப்
மாளிகை சமையல்காரரான பாலோ கேப்ரியல் திருடிக் கொடுத்துள்ளார். இது
தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாலோ கேப்ரியல் மீதான வழக்கு விசாரணை வாடிகன்
நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, போப்பின் கடிதங்களைத் திருட வேண்டும்
என்பது என் நோக்கமல்ல. வாடிகனில் நிலவும் கெடுதல்கள் மற்றும்
திருச்சபைகளில் நடக்கும் ஊழல் குறித்து போப் ஆண்டவருக்குத்
தெரிவிக்கப்படுவதில்லை என்று நான் கருதினேன். இந்தப் புத்தகம் மூலம்
அங்குள்ள பிரச்னைகளைப் பகிரங்கப்படுத்தி, தேவாலயம் சரியான பாதையில் செல்லவே
அவரது கடிதங்களை எடுத்துக் கசிய விட்டேன்' என்று பாலோ கேப்ரியல் ஒப்புதல்
வாக்குமூலம் கொடுத்தார்.
இவ்வழக்கில் பாலோ கேப்ரியலுக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி கியசப்பே டெல்லா தீர்ப்பளித்தார்.
மேற்கண்ட
சம்பவத்தில் பாதிரியார்கள் செய்யும் திருகுதாளங்கள் மற்றும் ஊழல்கள்
சம்பந்தமாக போப் வைத்திருந்த ஆவணங்களை வாடிகனில் உள்ள சமையல்காரர்
திருடியுள்ளார். அதில் பாதிரியார்களின் பலான செய்திகள் மற்றும் ஊழல்கள்
குறித்த செய்திகள் உண்மைப்படுத்தப்பட்டுள்ளன. அதை வைத்துத்தான் சிறப்பு
புத்தகத்தை கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் எழுதியுள்ளார். இது போப்
பதவி விலக சொல்லப்பட்ட காரணங்களில் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இதை
நாம் சொல்லவில்லை. இத்தாலி பத்திரிக்கைகளே பல மாதங்களுக்கு முன்னர்
சொல்லிவிட்டன. அவ்வாறு இத்தாலி பத்திரிக்கைகள் சொன்ன செய்திகளை ஏற்கனவே
வாடிகன் நிர்வாகம் மறுத்தது. இப்போது அது உண்மையாகியுள்ளது.
இதோ அதுகுறித்து முன்னர் வந்த செய்தி :
போப்பாண்டவர் ராஜினாமா செய்வதாக வந்த செய்திக்கு வாடிகன் கண்டனம்!
கத்தோலிக்க
கிறிஸ்தவ தலைவர் போப்பாண்டவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக
இத்தாலி பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தியை, வாடிகன் அதிகாரிகள்
மறுத்துள்ளனர். இத்தாலி பத்திரிக்கையான லிபெரோ நாளிதழில் முதல் பக்கத்தில்
வெளியான செய்தி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பத்திரிக்கையின்
நிருபர் ஆண்டோனியா சோச்சி என்பவர் அந்த பரபரப்பான செய்தியை எழுதி
இருந்தார்.
அதில்,
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்
வயோதிகம் காரணமாக உடலளவில் பலவீனமாக உள்ளார். மேலும் உலகளவில் கத்தோலிக்க
பாதிரியார்கள் மீது எழுந்து வரும் பாலியல் குற்றச் சாட்டுகளால், போப்
மனமுடைந்து காணப்படுகிறார். அதனால் வரும் 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
அவருக்கு 85 வயது நிறைவடைந்த உடன், போப் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என
தெரிவிக்கப்பட்டிருந்தது.
மற்ற
இத்தாலி பத்திரிக்கைகள் சிலவற்றிலும் இந்தச் செய்தி வெளியாகி இருந்தது.
டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியில் பல நாடுகளில் 170க்கும்
மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துன்பறுத்தல் வழக்குகளில் கத்தோலிக்க
பாதிரிமார்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர். இதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட
போப்பின் முயற்சிகள் தோல்வியுற்றதால், அவர் ராஜினாமா முடிவுக்கு
வந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தச் செய்திகளை
வாடிகன் அதிகாரிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
இது குறித்து வாடிகன் நகர செய்தித் தொடர்பாளர் பாதிரியார் பிடரிக்கோ லோம்பார்டி கூறியதாவது;
போப்பின்
உடல்நிலை மிக சிறப்பாக உள்ளது. அவருக்கு தனது பதவியை ராஜினாமா செய்யும்
எந்த எண்ணமும், தேவையும் இதுவரை ஏற்படவில்லை. ஜெர்மனிக்கு சென்றபோதும்
அவருக்கு எந்த உடல்நலக் குறைவும் ஏற்படவில்லை. அவருக்கு எதிராக எழும் எல்லா
சிக்கல்களை மேற்கொள்ளும் திறமை அவரிடம் உள்ளது. ராஜினாமா குறித்த தகவல்களை
எழுதியவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உடல் ரீதியாகவோ,
மனரீதியாகவோ போப்பிற்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. அவர் நல்ல
உடல்நலத்துடன் உள்ளார், என்றார்.
இது குறித்து செய்தி வெளியிட்ட நிருபர் ஆண்டோனி யோகூறியதாவது:
இந்த
வதந்தியை கிளப்பி விட்டதே, வாடிகன் நகரத்தைச் சேர்ந்தவர்கள்தான். ராஜினாமா
செய்வது குறித்த தகவலை, போப் இதுவரை மறுக்கவே இல்லை, என்றார்.
அதாவது
பாலியல் சேட்டைகள் செய்யும் பாதிரிகளையும், ஊழல் பெருச்சாலிகளையும் ஒழிக்க
இயலவில்லை. இவர்களுக்கு தலைமைதாங்கி இனிவேலையில்லை என்று பாதிரியார்கள்
மீது கொண்ட வெறுப்பின் காரணமாக 85 வயது முடிந்தவுடன் போப் ராஜினாமா
செய்யப்போவதாக இதற்கு முன்பே இத்தாலி பத்திரிக்கைகள் செய்தி
வெளியிட்டுவிட்டன.
இப்போது
எப்படி வாடிகன் நிர்வாகம் நாம் சொல்லக்கூடிய காரணங்களை மறுத்து அறிக்கை
வெளியிட்டார்களோ அதுபோல அப்போதும் வாடிகன் நிர்வாகம் அதை மறுத்து போப் நல்ல
உடல்நிலையில் உள்ளார்; அவர் ராஜினாமா செய்யவுள்ளதாக வரும் செய்திகள்
அனைத்தும் வதந்திகள் என்று செய்தி வெளியிட்டது.
ஆனால்
இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ஏற்கனவே போப் ராஜினாமா
தொடர்பாக பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்திகளை வாடிகன் மறுத்தது. ஆனால்
வாடிகன் நிர்வாகம் மறுத்த விஷயம் இப்போது நடந்துவிட்டது. போப் ராஜினாமா
செய்துள்ளார். இப்போது வாடிகன் நிர்வாகம் ஏற்கனவே மறுத்த செய்தி
உண்மையாகிவிட்டது. இதன் மூலம் வாடிகன் நிர்வாகத்தின் அறிவிப்பு பொய்
என்பதும் நிரூபணமாகியுள்ளது.
அதுபோல
தற்போது வாடிகன் நிர்வாகம் மறுத்துள்ள போப் குறித்த செய்திகளும் உண்மை
என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும். இன்ஷா அல்லாஹ்...
ZN
ZN