Tuesday, April 30, 2013

மட்டக்களப்பில் யாணை தாக்கி முதியவர் பரிதாபமாக பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி அல்விஸ்குளம் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (29) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட, காக்காச்சிவட்டை பகுதியை சேர்ந்த சாமித்தம்பி சரவணமுத்து (77) என்பவரே உயிரிழந்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

மாடுகளை பார்ப்பதற்காக இப்பகுதிக்கு வந்த இவர் குடிசையொன்றில் உறங்கிக்கொண்டிருக்கும்போது, யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

பின்னர் படுகாயமடைந்த நிலையில் கரடியனாறு வைத்தியசாலைக்கு இவரை கொண்டுசென்ற போது உயிரிழந்துள்ளார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Disqus Comments