Tuesday, April 30, 2013

பு/விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலத்தின் முதலாவது செய்தி மடல் (News Letter)

புத்தளம் தெற்கு கோட்ட மட்ட விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் முதலாவது செய்தி மடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி மடலானது பாடசாலையின் அடைவுகள், சாதனைகள், மற்றும் பாடசாலை தொடா்பான முக்கியச் செய்திகளை உள்ளடக்கியுள்ளது. 1949ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையின் வரலாற்றில்  இதுபோன்ற செய்தி மடல் வெளியிடப்படுவது  இதுவே முதலாவது  மைற்கல்லாகும். பாடசாலையை் பற்றி வெளியுலகத்திற்கு தெரிவிற்கும் இந்த முயற்சி பற்றி ரெட்பானா செய்திகள் பாடசாலை அதிபரை தொடா்பு கொண்டு கேட்ட போது  செய்தி மடலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. இன்ஷா அல்லாஹ் மிக விரையில் இந்த செய்தி மடலானது வைபவ ரீதியான வெளியிடப்படும்  என்பதை தெரிவித்துக் கொண்டதோடு, இந்த செய்தி மடலானது தொடா்ந்தும் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தந்தார்.  உண்மையில் இது போன்ற புத்தாக்கச் செயற்பாடுகள் பாராட்டத் தக்கவையாகும்.

 
Disqus Comments