கடந்த 24.04.2013 திகதியன்று வாகன விபத்தில் மரணமடைந்த புத்தளம் பிரதேச சபைத் தலைவா் திலுக் சுசார பெரேரா அவா்களின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவா்கள் மதுரங்குளியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு விஜயம் செய்தார்கள்.
மறைந்த திலுக் சுசார பெரேரா அவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையாக மதுரங்குளி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள கடைகள், பொது இடங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றில் வெள்ளைக் கொடிகள் பறக்க விட்டிருப்பதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.







