Thursday, April 25, 2013

புத்தளம் பிரதேச சபைத் தலைவா் திலுக் சுசார பெரேரா வாகன விபத்தில் பலி

இன்று (25.04.2013)  நள்ளிரவு சிலாபம் பதுளு ஓயா பகுதியில் நடைபெற்ற வாகன விபத்தில் புத்தளம் பிரதேச சபைத் தலைவா் திலுக் சுசார பெரேரா  பரிதாப மரணமானார். கொழும்பில் இருந்து வந்து கொண்டிருந்த அவா்களது வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வண்டியின் மீது மோதியமையினாலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய புத்தளம் பிரதேச சபைத் தலைவா் திலுக் சுசார பெரேரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன்  வாகனத்தின் சாரதி பலத்த காயங்களுடன் சிலாபம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வாகன சாரதி கைது் செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடா்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

Disqus Comments