Tuesday, May 28, 2013

வறுமையினால் 5 குழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தைக்கு மரணதண்டனை!

வறுமையினைத் தொடர்ந்து வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளால் தம் 5 குழந்தைகளைக் கொலை செய்த கொடூர தந்தைக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

உத்தரப்பிரதேசம் காசியாபாத் மாவட்ட விஜயநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவீந்திர வர்மா. தம் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த இவரால், தம் வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவுகளைச் சரியாக நிர்வகிக்க முடியவில்லை. வறுமையினால் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகமானது.

இதனால் மனம் வெறுத்திருந்த வர்மா, தம் குழந்தைகள் 5 பேரையும் ஈவிரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்தார். குழந்தைகளில் 9 மாத கைக்குழந்தை ஒன்றும் உண்டு. குழந்தைகளைக் கொன்ற பின்னர் தம் மனைவியையும் கொலை செய்ய முயன்ற நேரத்தில்லவர் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
.
கொலை குற்றங்களுக்காக வர்மா மீது காசியாபாத் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது. வர்மா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால், காசியாபாத் நீதிமன்றம் வர்மாவுக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
Disqus Comments