Wednesday, May 29, 2013

ஜா - எல, ஆயுத முனையில் நடந்த 70 இலட்ச ரூபா துணிகர கொள்ளை. போலிசார் வெளியிட்டுள்ள நேரடி CCTV வீடியோ இணைப்பு.

தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான ஏழு மில்லியன் ரூபா பணம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது.

ஜா - எல, ஏக்கல பிரதேசத்தில் நேற்றுப் பட்டப் பகலில் துணிகரமாக கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளே நேற்றுப் பிற்பகல் 1.00 மணியளவில் ஆயுத முனையில் 70 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென் றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொட ர்பாக மேலும் தெரிய வருவதாவது:

ஜா-எல பிரதேசத்திலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக அதன் பணிப்பா ளர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றிலிருந்து 7 மில்லியன் ரூபா பணத்தை மீளப்பெற்றுக் கொண்டு தனது காரில் வந்துள்ளார்.

பணத்துடன் ஜா-எல பிரதேசத்திலுள்ள தொழிற்சாலைக்கு காரை செலுத்திச் சென்றுகொண்டிருந்த போது தொழிற்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் வானில் முகமூடிகள் அணிந்த நிலையில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் நால்வர், காரை நிறுத்தி ஆயுதமுனையில் மேற்படி தொழிற்சாலையின் பணிப்பாளரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.

பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர கொள்ளைச் சம்பவத்தை அடுத்து அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கியிலிருந்து பணத்தை மீளப்பெற்றுக் கொண்டு வந்த மேற்படி தொழிற்சாலை யின் பணிப்பாளர் கொள்ளை தொடர்பாக ஜா-எல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டை அடுத்து சம்பவம் நடைபெற்ற பிரதேசத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் கொள்ளையிட்ட பணத்துடன் தப்பிச் சென்ற முகமூடிக் கொள்ளையர்களை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற பிரதேசம் எங்கும் தீடீர் மற்றும் சுற்றிவளைப்பு தேடுதல்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பல தரப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பொலிஸார் பதிவுசெய்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு – 02 கொம்பனித் தெருவிலுள்ள நவம் மாவத்தை பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பட்டப் பகலில் இதேபாணியில் ஒரு கோடி ரூபா கொள்ளையிடப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

நன்றி நியூஸ்பெஸ்ட்


Disqus Comments