Tuesday, May 21, 2013

மின்சாரம் தாக்கி இறந்த மாட்டிற்கு ரூ 70 ஆயிரம் இழப்பீடு: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

சரியாக பராமரிக்காத மின்கம்பி அறுந்துவிழுந்ததால் உடல் கருகி இறந்த எருமை மாட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனம் ராஜ்தானி எரிசக்தி நிறுவனம். இந்நிறுவனத்தின் பராமரிப்பின்கீழ் வரும் இடத்திலுள்ள மின்சார கம்பி ஒன்று பிரஹம் பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான எருமை மாட்டின்மீது அறுந்துவிழுந்து, அம்மாடு உடல் கருகி இறந்தது. இதனைத் தொடர்ந்து ராஜ்தானி எரிசக்தி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி டெல்லிவாசி நுகர்வோர் தீர்ப்பாயத்தில் 2009-ம் ஆண்டு வழக்கு பிரகாஷ் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இறந்த மாட்டிற்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாயும் வழக்கை நடத்துவதற்காக 20 ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் பிரகாஷிற்கு இழப்பீடு வழங்க ராஜ்தானி நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். தம் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளதாவது:

"மின்னோட்டம் பாயும்  கம்பியைச் சரியாக பராமரிக்காததால் அது அறுந்து மாட்டின் மீது விழுந்துள்ளது. இதனால் மாடு உயிரிழந்துள்ளது என்பது விசாரணையில் தெளிவாகியுள்ளது.

ராஜ்தானி மின்துறை நிறுவனத்தின் இது போன்ற கவனக்குறைவால் இதேபோல் மனிதர்களுக்கும் ஆபத்து நேரிடும் அபாயம் உள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் வலுவிழந்த கம்பிகளை மாற்ற வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பாகும். இப்பொறுப்பில் இருந்து தவறிய ராஜ்தானி எரிசக்தி நிறுவனம் வாதி பிரகாஷிற்கு ரூ.70 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறேன்."

மேற்கண்டவாறு தம் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ஒரு எருமை மாட்டிற்கு 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெறும் முதல் நபர் பிரகாஷாக இருப்பார்
Disqus Comments