எதிர்வரும் தோ்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகளால் தங்கள் கட்சிகளுக்கு ஆட்கள் சோ்க்கும் பணிகள் துரதி கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி நாடளாவிய ரீதியில் ஏற்கனவே ஆட்களை சோ்த்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சோ்ப்பு வேட்டையில் இறங்கியுள்ளது. அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வித்தியாச மான முறையைக் கையான்டு ஆட்சோ்ப்பு நடவடிக்கையை ஆனமடுவை பிரதேசத்தில் மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன், ஆனமடுவ பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாட்டு வண்டியிலும் துவிச்சக்கர வண்டியிலும் பயணம்
செய்து, ஐக்கிய தேசிய கட்சிக்கான அங்கத்துவ படிவத்தினை மக்களுக்கு
வழங்கினார்.
வாழ்க்கை செலவு மற்றும் எரிப்பொருள் விலையுயர்வு, மின் கட்டணம் அதிகரிப்பு
என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இப் பயணத்தினை மேற்கொண்டு
ஐக்கிய தேசிய கட்சி அங்கத்துவர்களுக்கு அங்கத்துவ படிவத்தினை வழங்கினார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் வீட்டுக்கு வீடு திட்டம் நேற்று
வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டமையும் இந்நிகழ்வுக்கு ஐக்கிய தேசிய
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ
அத்தநாயக்க, மைக்கல் ஜோசப் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.