Saturday, May 18, 2013

ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி வழங்கிய 14 நடாக மாறியது பிரான்ஸ் ??????

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அனுமதி அளிக்கும் சட்டம் பிரான்ஸில் நிறைவேறியதக பிரான்ஸின் உத்தியோக பூா்வ பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டது.. இதன் மூலம் உலக அளவில் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி அளித்த 14வது நாடாக பிரான்ஸ் உள்ளது. 
ஏற்கனவே அனுமதியளித்த 13 நாடுகள் பின்வறுமாறு
1. நெதா்லாந்து - ஓரினச் சோ்க்கைக்கு முதலாவதாக அனுமதி வழங்கிய நாடாக காணப்படுகின்றது. இது 2001ம் ஆண்டு அனுமதியை வழங்கியது.
2. பெல்ஜியம் - 2003ம் ஆண்டு இங்கு சட்டம் நடைமுறைக்கு வந்நது.
3. ஸ்பெயின் - ஐரோப்பிய யூனியனின் மூன்றாவது நாடாகவும் ஓரினச் சோ்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய மூன்றாவது நாடாகவும் 2005ம் ஆண்டு மாறியது
4. கனடா - 2005ம்ம் ஆண்டு ஜுலை மாதம் அளவில் இங்கு சட்டம் இயற்றப்பட்டது.
5. தென்னாபிரிக்கா - 2006 நவம்பா் மாதம் சட்ட அங்கீகாரத்தை வழங்கியதோடு ஓரினச் சோ்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய முதல் ஆபிரிக்க நாடாக மாறியது.
6. நோர்வே - 2009ம் ஆண்டு இங்கு சட்டத்தை நடைமுறைக்கு வந்நது.
7. சுவீடன் - இதுவும்  2009ம் ஆண்டு இங்கு சட்டத்தை நடைமுறைக்கு வந்நது.
8. போர்த்துக்கல் - இங்கு 2010ம் ஆண்டு இங்கு சட்டத்தை நடைமுறைக்கு வந்நது.
9. ஐஸ்லாந்து - இதுவும்  2010ம் ஆண்டு ஜுலை மாதம் சட்டத்தை நடைமுறைக்கு வந்நது.
10. ஆா்ஜன்டீனா - 2010ம் ஆண்டு ஜுலை மாதம் ஓரினச் சோ்க்கையை சட்டமாக்கியதோடு இதனை சட்டமாக்கிய முதல் ஐக்கிய அமெரிக்க நாடு என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டது.
11. டென்மார்க் -  2012ம் ஆண்டு இங்கு சட்டத்தை நடைமுறைக்கு வந்நது.
12. உருகுவே - இவ்வருடம் ஏப்ரல் மாதம் அளவில் தான் சட்டமாக்கப்பட்டுள்ளது.
13. நியூஸிலாந்து  - இவ்வருடம் ஏப்ரல் மாதம் அளவில் தான் சட்டமாக்கப்பட்டுள்ளதோடு பசுபிக் சமுத்தி நாடுகளில் முதலாவது சட்ட அங்கீகாரம் வழங்கிய நாடாக மாறியது.
Disqus Comments