Saturday, May 18, 2013

IPL போட்டிகளில் 100 விக்கட்டுக்களை கைப்பற்றி லசித் மலிங்க சாதனை

இன்று (2013.05.18) மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் II பன்ஜாப் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம் பெற்ற 69 போட்டியில்  கிங்ஸ் II பன்ஜாப் அணியின் வீரா் பிரவீன் குமாரின் விக்கற்றை கைப்பற்றிதன் மூலம் IPL போட்டிகளில் 100 விக்கற்றுக்களைப் பெற்ற முதல் வீரா் என்ற சாதனையை முப்பை இந்தியன்ஸ் அணியின் வீரா் லசிக் மாலிங்க  பெற்றுக் கொண்டார். இதுவரையில் அவா் 70 போட்டிகளில் பங்குபற்றியே இந்த 100 விக்கற்றுக்களைப் பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. IPL போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு ஆரம்பிகப்பட்டது முதல் இன்று வரை லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே விளையாடி வருகின்றார்.

6வது பருவகால IPL போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட போது மலிங்க 56 போட்டிகளில் 83 விக்கட்டுக்களை கைப்பற்றி இருந்த நிலையில் காணப்பட்டார். ஆகவே இந்த  6 வது IPL போட்டிகள் 100 விக்கற்றுக்களை பைப்பற்றுவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்ட நிலையிலேயே இன்று அவா் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவா் இதுவரை கைப்பற்றிய 100 விக்கற்றுக்களில் 48 விக்கற்றுக்கள் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்கச் செய்யபட்டவையாகும்.

இதுவரை அதிகம் விக்கற்றுக்களை கைப்பற்றிவா்கள் விபரம் வருமாறு.............


Disqus Comments