கறுப்பு அபாயா அணிந்து முகத்தை மூடிய வண்ணம் கண்டி நகருக்கு பஸ்ஸில்
வந்திறங்கிய பெண்ணொருவர் நகர வீதியில் சந்தேகத்திற்கிடமாக
நடந்துகொண்டமையினால் கண்டி பொலிஸார் அப்பெண்ணைக் கைதுசெய்து
விசாரணைக்குட்படுத்தினர்.மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் பொலிஸாரை தொடர்பு கொண்டதனாலேயே குறித்த பெண் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அப்பெண் சிங்களப் பெண் என்பது விசாரணைகளிலிருந்த தெரியவந்துள்ளது. தான் இந்தியாவிலிருந்து இலங்கை வந்ததாக அப்பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்குப்பின் பொலிஸார் குறித்த பெண்ணை எச்சரித்து விடுதலை செய்தனர்.