Friday, May 17, 2013

நேபாளத்தில் ஓடுபாதையிலிருந்து விலகி ஆற்றில் இறங்கிய விமானம்!

நேபாளம்: விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாடு தவறியதைத் தொடர்ந்து விமான நிலையத்தின் அருகிலுள்ள ஆற்றில் இறங்கிய சம்பவம் நேபாளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள நாட்டிலுள்ள சுற்றுலா பகுதியான பொக்காரா என்ற இடத்திலிருந்து நேபாள ஏர்லைன்ஸ் விமானம் ஜோம்சோம் விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. 3 விமானிகள் மற்றும் 8 ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 21 பேர் பயணம் செய்த இந்த விமானம் நேற்று காலை 8.30 மணி அளவில் ஜோம்சோம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது திடீரென விமானம் கட்டுப்பாடு இழந்ததைத் தொடர்ந்து ஓடுபாதையினை விட்டு விலகி விமான நிலையத்தைவிட்டு வெளியே ஓட ஆரம்பித்தது.

விமானியின் திறமையுடன் விமானத்தைக் கையாண்டு, விமான நிலையத்தின் அருகிலுள்ள ஆற்றில் விமானத்தை இறக்கினார். இதனால் நிகழ இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 9 பேரில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. விமானத்தில் பயணம் செய்த மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் நேபாளத்தில் சுற்றுலா பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Disqus Comments