Friday, May 3, 2013

மின்கம்பத்துடன் தலை மோதி பஸ் நடத்துனர் உயிரிழப்பு

தலை, மின்கம் பத்துடன் மோதி விபத்துக்குள்ளா னதில் பஸ் நடத்துனர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தங்காலையில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சாரதி பஸ்ஸை பின்நோக்கிச் செலுத்திய போது அவருக்கு உதவும் வகையில் பின் வீதியை அவதானிப்பதற்காக தலையை யன்னலுக்கு வெளியில் இட்டு திரும்பிப் பார்த்த வேளை பஸ் நடத்துனரின் தலை மின் கம்பத்துடன் மோதியுள்ளது. இதில் அந்நடத்துனர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன கூறினார்.

கொழும்பு – தங்காலை தனியார் பஸ் நடத்துனரான சமித் ரூபசிங்க எனும் 27 வயதுடைய நபரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார். விபத்து நேற்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தங்காலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி அனைத்து பயணிகளும் இறங்கிய பின்னர் மீண்டும் கொழும்பு வருவதற்காக பஸ்ஸை எதிர் திசையில் செலுத்துவதற்கென பின்னோக்கிச் செலுத்திய போதே, பஸ் நடத் துனரின் தலை பஸ்ஸிற்கும் மின் கம்பத்திற்குமிடையில் சிக்கி நசுங்குண்டுள்ளது.

இதனால் படுகாயமடைந்த பஸ் நடத்துனர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஏற்பட்ட அதிக இரத்தப் போக்குக் காரணமாக சிகிச்சை பலனின்றிய நிலையில் பஸ் நடத்துனர் உயிரிழந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் தங்காலைப் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Disqus Comments