ஸ்ரீ லங்கா முஸ்லிம்காரங்கிஸ் தலைவா் ரவூப் ஹக்கீம் இன்று காலை புத்தளத்திற்கு விஜயம் செய்து புத்தளம் மொஹிடீன் ஜும்ஆ பள்ளி வாயலின் நம்பிக்கையாளர் சபையின்
உறுப்பினர்களையும் ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் கிளைத் தலைவரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
புத்தளம் மொஹிடீன் ஜும்ஆ பள்ளியில் நடைப்பெற்;ற இக்கலந்துரையாடலில், புத்தளம் காழி நீதிமன்றம் திறப்பது மற்றும் புத்தளம் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
இதன்போது நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து களப்பு ஊடாக ஏனைய மாவட்டங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்பட உத்தேசித்துள்ள மின்சார திட்டம் தொடர்பாகவும் இத்திட்டம் தொடர்பாக மீனவர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் புத்தளம் நகர சபை உறுப்பினர் டி.எம்.அமீன், புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக சபைத்தலைவர் முஸம்மில், ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் மாவட்ட தலைவர் அப்துல்லா ஆலிம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.