Tuesday, May 28, 2013

நெருங்கிய உறவு திருமணத்தால் செவித்திறன் குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கலாம்???

தமிழ்நாட்டில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது பிறக்கும் ஆயிரத்தில் ஆறு குழந்தைகள் செவித்திறன் குறைபாட்டுடன் பிறக்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்துக்கொள்ளும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் இவ்வகை குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்பது நிரூபணமாகியுள்ளது.

நிரந்தர செவிட்டுத் தன்மையுடன் பிறந்த 310 குழந்தைகளின் பெற்றோர் குறித்த விபரத்தை சேகரித்தபோது அவற்றில் 208 குழந்தைகள் நெருங்கிய உறவு முறை திருமணத்தின் மூலம் பிறந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

2003ம் ஆண்டில் இருந்து 2013ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு கால ஆய்வில் செவித்திறன் குறைபாட்டுடன் பிறக்கும் 66 சதவீதம் குழந்தைகள் நெருங்கிய உறவுமுறை திருமணத்தின் மூலம் பிறந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் 12 வயதிற்குட்பட்ட 50 ஆயிரம் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரத்துக்கு ஆறு குழந்தைகளுக்கு செவித்திறன் கோளாறு உள்ளமை தெரியவந்துள்ளது.

அகில இந்திய அளவில் இது மூன்று மடங்கு அதிகமாகும். சர்வதேச அளவில் ஆறு மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disqus Comments