Tuesday, May 28, 2013

முதல்முறையாக முஸ்லிம் பெண் என்ற பெயரில் இரு ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம்?????

இந்த செய்தியை அல்லது எந்த செய்தியாக இருந்தாலும் முதன் முதலாக எந்த மீடியாவில் பிரசுரிக்கப்படுகின்றது. அதன் நம்பகத்தன்மை எத்தகையது என்பதை ஊா்ஜிதம் செய்து கொள்ளவேண்டிது அணைவரினதும் கடமையாகும். வெறுமனே மேற்கத்தேய மீடியாக்கள் பிரசுரிப்பதை மட்டும் மையாமாகக் கொண்டு நாம் நம்பிவிடவும் கூடாது. அதனை மக்கள் மத்தியில் பரப்பி விடவும் கூடாது. இன்றைய காலகட்டத்தில் பிரபல்யம் தேடுபவா்கள் விரைவாக அதனைப் பெற்றுக் கொள்ள எடுக்கும் விடயமாக இஸ்லாம் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. 

ஆனால் கவலைக்கிடமாக விடயம் என்னவென்றால் இன்று எமது இலங்கைத் திருநாட்டில் வலைப்பதிவாளா்களாக இருந்து தற்போது .com ஆக மாறியவா்கள் செய்திகளை பதிந்து விடவேண்டும் என்ற காரணத்தினால் அது என்ன செய்தி, அதன் பின்னனி என்ன, அதன் மூலம் எங்கிருந்து பெறப்பட்டுள்ளது. போன்ற விடயங்களையெல்லாம் கவனிக்காது எமக்கு செய்திதான் வேண்டும் என்ற அடிப்படையில் காப்பி செய்து பேஸ்ட் செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில்  பரப்பப்படும் ஒரு செய்திதான்  இதுவும்.

உண்மையில் இவா்கள்  முஸ்லிம்களாக அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவா்களாக இருந்திருந்தால்  இப்படி ஒரு கேவலமான  வேலையை செய்திருக்க மாட்டார்கள்.  ஆக இவா்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. மேற்கத்தேய கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்ட அண்ணியா்கள் தான். ஆகவே நாம் இவா்களை முஸ்லிம்கள் என்றொ அல்லது இஸ்லாமியா்கள் என்றோ அழைக்க வேண்டியதில்லை. பாகிஸ்தான் சோ்ந்த இருபெண்கள் என்றே கூறப்பட வேண்டும். இப்படி மேற்கத்தேய மீடியாக்கள் கூறினால் பரவாயில்லை. மாறாக எமது முஸ்லிம்களால் நிறுவாகம் செய்யப்படும் செய்தித்தளங்கள் கூட இவ்வாறு அழைப்பதானது மிகுந்த கவலையளிப்பதோடு அந்த நிறுவாகிகளின் இஸ்லாமிய பற்று தொடா்பாக சந்தேகம் கொள்ள வேண்டிய நிலையே இன்று காணப்படுகின்றது. 

ஆக நாம் எமது இஸ்லாமிய சகோதரா்களை வேண்டிக் கொள்வது தயவு செய்து எம்மை நாமே தாழ்த்திக் கொள்ளாமல் இஸ்லாத்துக்கும், அதன் வளா்ச்சிக்கும், அதன் புனித தன்மைக்கும் எந்த விட இழுக்கும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.

பரப்பப்படும் செய்தி இதுதான்

பாகிஸ்தானை சேர்ந்த பெண் என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி ஒன்று, கடும் எதிர்ப்புகளை மீறி இங்கிலாந்தில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

இதன்படி முதல் முஸ்லிம் ஓரினச்சேர்க்கை ஜோடியாக இவர்கள் கருதப்படுகின்றனர்.

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ரெஹனா கவுசார் (34) மற்றும் சோபியா கமர் (29). இவர்கள் இருவரும் இங்கிலாந்தில் உள்ள பரிமிங்கம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்துக்கொண்ட இவர்கள், ஒன்றாக வாழ முடிவு செய்து, தெற்கு யார்க்ஷைர் பகுதியில் உள்ள வீட்டில், ஒரு வருட காலமாக தங்கிவந்துள்ளனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களான இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தப்போது, இவர்களுக்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானிலிருந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

பாகிஸ்தானில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்துகொள்ள சட்ட ரீதியாக அனுமதியில்லை. மேலும் இவ்வகையிலான உறவு குற்றமாகவும் கருதப்படுகிறது.

இதனையடுத்து, இம்மாதத்தின் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் அவர்கள் பதிவு திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமண சான்றிதழை இங்கிலாந்து குடியுரிமை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த ரெஹனா - சோபியா ஜோடி தங்களுக்கு இங்கிலாந்தில் வசிக்கும் நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டு மனு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Disqus Comments