Friday, May 10, 2013

கங்கண சூரிய கிரகணம் இன்று நிகழும்

இவ்வருடம் நிகழவுள்ள இரண்டு சூரிய கிரகணங்களுள் ஒன்று இன்று காலை நிகழவுள்ளது. சந்திரன் சூரியனை பூரணமாக மறைப்பதால் இது ஒரு கங்கண சூரிய கிரகணமாகும். கங்கணம் என்பது சந்திரன் சூரியனை பூரணமாக மறைக்கும்போது சூரியனின் மறைக்கப்படாத பகுதி நெருப்பு வட்டமாக வெளித் தெரியும் என கொழும்புப் பல்கலைக்கழக பௌதீகவியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் சந்தன  ஜயரத்ன தெரிவித்தார்.

இந்தக் கிரகணம் இலங்கை நேரப்படி அதிகாலை 2.05 இற்கு ஆரம்பமாகி காலை 8.55 இற்கு முடிவடையும். இக் கிரகணததை இலங்கையில் பார்க்க முடியாது.
Disqus Comments