புத்தளம் தெற்கு கல்வி வலயத்தில்
அமைந்துள்ள பு / கடயாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம்(நவோதய பாடசாலை) ”கடயாமோட்டை
புத்தெழுச்சி – 2013” என்ற தலைப்பில் மாபெரும் கல்விக் கண்காட்சிக்கான அனைத்துவிதமான ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இக்கண்காட்சி இம்மாதம் 19, 20,21 புதன்,
வியாழன், வெள்ளி தினங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி
அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் இந்நிகழ்வின் இறுதி நாளன்று
(21/06/2013 வெள்ளிக் கிழமை ) விஜயம் தரவுள்ளார். கல்வி அமைச்சர் அவர்கள்
தனது விஜயத்தின் போது ஆயிரம் இடைநிலை பாடசாலைக்கான பெயர் பலகையை திறந்து
வைப்பதுடன் இத்திட்டத்தின் முதல் கட்டமாக ” மஹிந்தோதய “
ஆய்வு கூட மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல்லையும் வைக்கவுள்ளார்.
இக்கண்காட்சியானது புத்தளம் கல்வி வலயத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் புத்தளம் கல்வி
வலயத்தின் தமிழ்ப் பிரிவின் உதவி கல்விப் பணிப்பாளருடன் ஆசிரியர் ஆலோசகர்
குழு 13/06/2013 வியாழனன்று கண்காட்சி நடவடிக்கைகளை பார்வையிட்டு,
ஆலோசனைகளையும் வழங்கினர்.
இக்கண்காட்சியில் பாடவிதானத்துடன்
தொடர்புடைய பகுதிகளும், இணைபாடவிதான செயற்பாடுகளும் உள்ளடங்கியதாக இருப்பது
சிறப்பம்சமாகும். இலங்கையின் வரலாற்று சின்னமான சீகிரியவின் மாதிரி
அமைப்பு , டைனோசர் , மழைக்காடு, முன்மாதிரி விவசாய தோட்டம், ஒலிபரப்புக்
நிலையத்தின் மாதிரி அமைப்பு , மாணவர்களின் பெருமதிவாய்ந்த ஆக்கங்கள்
காட்சிப்படுத்தப்படவுள்ளன. சிறுவர்களுக்கான களியாட்ட நிகழ்வுகளும், மேடை
நிகழ்சிகளும் இடம்பெறவுள்ளன. மேலும் இலங்கையில் காணப்படும் அரச , பொது
நிறுவனங்களின் காட்சியறைகளும் இடம்பெறவிருக்கறது.
கண்காட்சி காலை 10.00 மணி தொடக்கம் இரவு
9.00 மணிவரை காட்சிப்படுத்தப்படும். பாடசாலை மாணவர்களுக்கு 10 மணி தொடக்கம்
2 மணி வரையும், ஏனையோருக்கு 2 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையும்
திறந்திருக்கும்.