புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி, தல்கஸ்கந்த பிரதேச வீடொன்றில்
சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் பௌத்த பிக்கு
ஒருவருடன் இளைஞர் ஒருவரையும், மேலும் இரு பெண்களையும் புத்தளம் பொலிஸார்
நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டினுள் இவர்கள் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்தே அவ்வீட்டை முற்றுகையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நடவடிக்கையின் போது கம்பஹா பிரதேச விகாரையொன்றினைச் சேர்ந்த 71 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த வீட்டின் உரிமையாளரான பெண்ணுடன் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் அடங்குகின்றனர்.
தான் இதற்கு முன்னரும் குறித்த வீட்டிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பௌத்த பிக்கு, அதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை எனவும், கைது செய்யப்பட்டவர்கள் தங்கியிருந்த வீடு தவறான நடவடிக்கைகளுக்காக வாடகைக்கு வழங்கப்படும் வீடு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் புத்தளம் பொலிஸார், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.