இரணைமடு விமான ஓடுதளத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்.
விடுதலைப்புலிகள் தமது இலகு ரக விமானங்களை பறக்க விடுவதற்காக இந்த
ஓடுதளத்தை பயன்படுத்தி வந்ததுடன், போர் நடைபெற்ற போது, விடுதலைப்புலிகள்
அதனை முற்றாக அழித்திருந்தனர். இதனையடுத்து 2012 ஆம் ஆண்டு இந்த ஓடுதளம் விமானப்படையினரால் புதுபிக்கப்பட்டது.
சர்வதேச தரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த விமான ஒடுதளத்தின் நீளம் 1500 மீற்றர்களாகும். அகலம் 25 மீற்றர்களாகும். இந்த விமான ஒடுதளத்துடன் வடக்கில் உள்ள விமான ஓடுதளங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே வவுனியா, மன்னார், பலாலி ஆகிய பிரதேசங்களில் விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.