23 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் செயற்கை கருவூட்டல் மூலம் தான் பொதுவாக பெண்ணுக்கு இரட்டை குழந்தைக்கு மேல் பிறப்பதுண்டு.
ஆனால் செக்குடியரசு நாட்டில் முதல் முறையாக இயற்கை கருத்தரிப்பிலேயே இளம்பெண் ஒரே பிரசவத்தில் 5 அழகான குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை புரிந்துள்ளார்.
அவருடைய பெயர் அலெக்சாண்டிரா கிநோவா (வயது 23). இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பராகுவே நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 குழந்தைகளை பெற்றார்.
அதில் 4 ஆண் குழந்தைகள். ஒன்று பெண் குழந்தை. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். பிரசவத்தின்போது கணவர் அண்டோனியோ மனைவியின் அருகிலேயே இருந்தார்.
சுமார் 40 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த பிரசவத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.