டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்
பெற்று வந்த கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட மாணவி உயிரிழந்துள்ளதாக
வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சை பலனின்றி இன்று காலை குறித்த மாணவி உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
டெங்கு நோய் காரணமாக நேற்று குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
21 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.
டெங்கு நுளம்பு பரவல் காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட, கலை, முகாமைத்துவ பீடங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.