இங்கிலாந்தில் இன்று தொடங்கும் 7வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை
கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக
பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா,
இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா,
பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா–தென்ஆப்பிரிக்க அணிகள் கார்டிப் மைதானத்தில் இன்று மோதுகின்றன.
இந்திய அணி வீரர்கள் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் அசத்தினர். இந்த வெற்றிகள் இந்தியாவுக்கு புது நம்பிக்கையை தந்துள்ளன. இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கின் வருகையினால், ரோகித் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைப்பது கேள்விகுறி தான். ஒரு வேளை ரோகித் ஷர்மா கட்டாயம் வேண்டும் என்று டோனி விரும்பினால், தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான முரளிவிஜய் மாற்றப்படலாம்.

இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கக் கூடியவை.
இதனால் 5 பவுலர்களுடன் இந்தியா களம் இறங்க திட்டமிட்டுள்ளது. உமேஷ் யாதவ்,
இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர்குமார் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இர்பான்
பதானுக்கு வாய்ப்பு கிடைத்தால், பிரதான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு
இடம் கிடைப்பது சந்தேகம் தான்.
இந்த போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டங்களுமே ஏறத்தாழ வாழ்வா–சாவா ஆட்டம் போன்றது தான். ‘பி’ பிரிவில் 4 அணிகளுமே பயங்கரமானவை என்பதால் இது ‘குரூப் ஆப் டெத்’ என்று வர்ணிக்கப்படுகிறது. முதல் ஆட்டத்தை வெற்றிகரமாக தொடங்கினால், அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் அதிக நெருக்கடி இருக்காது. எனவே பயிற்சி ஆட்டங்களை போன்று மீண்டும் அசத்தினால், மினி உலக கோப்பையை இந்தியா வெற்றியுடன் ஆரம்பிக்கலாம். சச்சின் ன் ஓய்வுக்கு பிறகு இந்தியா பங்கேற்கும் மிகப்பெரிய தொடர் இதுவாகும்.
அதே சமயம் இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சரிசம சவாலுடன் தென்ஆப்பிரிக்கா வரிந்து கட்டுகிறது. அந்த அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ், அம்லா, டேவிட் மில்லர், இங்ராம், டுமினி ஆகியோரும் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள்.
இதே போல் பந்து வீச்சிலும் தென்ஆப்பிரிக்கா அசுர பலத்துடன் திகழ்கிறது. உலகின் அபாயகரமான பவுலர்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஏற்கனவே காயத்தால் சுமித், காலிஸ் ஆகிய இரு தூண்கள் இந்த போட்டிக்கான அணியில் இடம் பெறாத நிலையில், ஸ்டெயினும் விளையாட முடியாமல் போனால் அது அவர்களுக்கு நிச்சயம் பின்னடைவாக அமையும்.
பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்வியை ஒதுக்கி விட்டு, முதல் யுத்தத்திற்கு தென்ஆப்பிரிக்கா முனைப்புடன் இருப்பதால், இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு இரண்டு முறை சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சந்தித்துள்ளன. இரண்டு ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட், ஈ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இந்திய வீரர்கள்: டோனி (கேப்டன்) ஷிகர் தவான், முரளிவிஜய் அல்லது ரோகித் ஷர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது இர்பான் பதான், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர்குமார்.
தென் ஆப்பிரிக்கா வீரர்கள்: டிவில்லியர்ஸ் (கேப்டன்), அம்லா, அல்விரோ பீட்டர்சன், டுமினி, காலின் இங்ராம் அல்லது டேவிட் மில்லர், பாப் டு பிளிஸ்சிஸ், ஸ்டெயின் அல்லது கிளைன்வெல்த், மோர்னே மோர்கல், சோட் சோப், ராபின் பீட்டர்சன் அல்லது பாங்கிசோ, பெஹர்டைன் அல்லது ரையான் மெக்லரன்.