சூதாட்டப் புகார் காரணமாக பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித் தலைவா் முகமட் அஷ்ரபுல் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதையடுத்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், பங்களாதேஷ் கிரிக்கெட் போட்டிகளிலும் சூதாட்டம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது
ஐ.பி.எல். போன்று பங்களாதேஷில் பங்களாதேஷ் பிரிமியர்லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி இரண்டாம்திகதி நடைபெற்ற போட்டியில், டாக்கா கிளாடியேட்டர்ஸ்- சிட்டகாங் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிட்டகாங் அணி தோற்க வேண்டும் என்பதற்காக கிளாடியேட்டர்ஸ் அணியினைச் சார்ந்த முஹம்மத் அஷ்ரபுல் 12800 டாலர்கள் கொடுத்துள்ளார். இவர் பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.டெஸ்ட் போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்த முதல் பங்களாதேஷ் கிரிக்கெட் ஆட்டக்காரரும் ஆவார்.
இவர் கொடுத்த காசோலை,வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் திரும்பி வந்ததையடுத்து இந்த சூதாட்ட விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது. இதனைக் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.), ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தியதில் அஷ்ரபுல் தான் பணம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனைக் குறித்து கருத்து தெரிவித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீமுல்ஹஸன் விசாரணை அறிக்கை வரும்வரையில் அஷ்ரபுல் எந்த போட்டியிலும் இடம் பெற மாட்டார் என்றுக் குறிப்பிட்டார்.