Wednesday, August 21, 2013

இனி மொஸில்லா பயா்பொக்ஸ் தமிழ் மொழியில்

மொசில்லா பைஃயர்பொக்ஸ் என்னும் தேடுதல் இயந்திரம் இணையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த தேடுதல் இயந்திரம் ஆங்கிலத்திலும் 120 ஏனைய மொழிகளிலும் இயங்குகின்றது.

இப்போது தமிழிலும் வெளிவந்துள்ளது. இணையத்தில் நன்கு அனுபவமுடைய, தமிழிலும் நல்ல ஞானம் உள்ள தொண்டர்கள் பத்துபேர் இணைந்து, இந்த தேடுதல் இயந்திரத்தை தமிழில் உருவாக்கியுள்ளார்கள்.

இந்த தமிழ் இயந்திரத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் அநேகமாக எல்லா ஆங்கில சொற்களுக்குமே இணையான தமிழ் சொற்களை பாவித்திருப்பதுதான்.

மற்றமொழிகள், மொழிபெயர்ப்பு பாதி ஆங்கிலத்திலும், பாதி மற்ற மொழியும் கலந்ததாக உள்ளன. ஆனால் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட எல்லா ஆங்கில சொற்களுக்கும் தமிழ் மொழி பெயர்ப்பையே உபயோகித்திருப்பதாக தொண்டர் குழுவிலிருக்கும் பொறியியல் பட்டதாரி அருண் பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

உதாரணமாக தமிழில் Fileஎன்பதற்கு 'கோப்பு' என்றும் Preferencesஎன்பதனை 'விருப்பங்கள்' என்றும் Copyஎன்பதை 'நகல் ஏடு' என்றும் கிட்டத்தட்ட எல்லா ஆங்கில பதங்களுக்கும் தமிழையே உபயோகித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த ஒரு வருடகாலமாக நடைபெற்று வந்த இந்த மொழிபெயர்ப்பு பணி இப்போது நிறைவடைந்துள்ளது. இதனை இணையத்திலிருந்து தமது கணினிகளில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் தரவிறக்கம் செய்யலாம்.
தரவிரக்கம் செய்ய  இந்த லிங்கை கிளிக் செய்து அதில் தங்களுடை இயங்கு தளத்துக்கு தோதுவான மொசில்லா பைஃயர்பொக்ஸ் ஐ தரவிரக்கம் செய்து நிறுவிக் கொள்ள முடியும்.
 





Disqus Comments