Sunday, September 8, 2013

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 24 ஆயிரம் மாணவர்களை சேர்த்துக் கொள்ள தீர்மானம்


 இம்முறை பல்கலைக்கழகங்களுக்காக 24 ஆயிரம் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2012 ஆம் ஆண்டின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதற்காக அனுமதியை வழங்கியுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதமளவில் தலைமைத்துவ பயிற்சிக்காக மாணவர்களைத் தெரிவுசெய்ய முடியும் என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Disqus Comments